துணை நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்து வந்த பிரபல அம்மா அம்மா நடிகை சோபனா நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை நகரில் ஞாயிற்றுக்கிழமைதோறும், ஒரு விபசார கும்பல் கிண்டி ரேஸ் கிளப் அருகே ரகசியமாக காரில் வந்து, வாடிக்கையாளர்களை அங்கு வரவழைத்து, ரேட் பேசி நட்சத்திர ஓட்டலில் உல்லாசம் அனுபவிப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பிரபல அம்மா நடிகை சோபனா (வயது 40) இந்த விபசார கும்பலுக்கு தலைமை ஏற்று நடத்துவதாகவும் தெரிய வந்தது. இந்த விபசார கும்பலை மடக்கிப்பிடிக்க போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர், விபசார தடுப்பு உதவி கமிஷனர் கிங்ஸ்லின் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையிலான தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
விபசார கும்பல் தலைவியாக செயல்பட்ட அம்மா நடிகையை போலீசார் செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். கம்ப்யூட்டர் என்ஜினீயர் பேசுவதுபோல பேசினார்கள். வாடிக்கையாளர் கிடைத்த மகிழ்ச்சியில் அம்மா நடிகை சோபனா, பல உண்மைகளைக் கூறிவிட்டார்.
பிரபலமான படங்களில் துணை நடிகை வேடத்தில் நடித்துள்ள அக்கா தங்கை நடிகைகள் இருவரது பெயரைச் சொல்லி, அவர்களை அழைத்து வருவதாக சொன்னார். பெரிய தொகையையும், சோபனா கேட்டார். அதற்கு ஒப்புக்கொண்டு மாறுவேட போலீசார் வாடிக்கையாளர் போல கிண்டி ரேஸ் கிளப் அருகே காரில் காத்திருந்தனர்.
3 மணி நேரம் காத்திருந்த பிறகு அம்மா நடிகை சோபனா மட்டும் முதலில் காரில் வந்தார். அடுத்து 1 மணி நேரம் கழித்து அக்கா தங்கை துணை நடிகைகள் இருவரும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வந்தவுடன் மாறுவேட போலீசார் சோபனாவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அடுத்து அக்கா தங்கை இருவரும் பிடிபட்டனர்.
உடனடியாக நீதிமன்றத்தில் சோபனா ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் மறைந்த பழம்பெரும் வில்லன் நடிகரின் உறவினர் என்றும் போலீசார் தெரிவித்தனர். அக்கா தங்கை துணை நடிகைகள் இருவரும் பாதிக்கப்பட்ட பெண்களாக கருதப்பட்டு, மைலாப்பூர் அரசு பெண்கள் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
இதேபோல, சூளைமேடு பகுதியில் போலீசார் நடத்திய வேட்டையில் சாந்தி என்ற துணை நடிகையும், ஜெயராஜ் மோசஸ் என்ற புரோக்கரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்தும் 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டு, மைலாப்பூர் அரசு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.