தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை சார்மி. சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் முடிவில் வீரர்கள் அனைவருக்கும் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நடிகை சார்மியும் கலந்து கொண்டார். அப்போது 18 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவர் சார்மியிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு சார்மியும் சம்மதம் சொல்லியுள்ளார், இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த இளைஞர் சார்மியின் இடுப்பில் கிள்ளியுள்ளார். இதனையடுத்து சார்மி உடனடியாக அந்த இளைஞரை பிடித்து தள்ளியுள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் விஷயம் அறிந்து அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து சார்மி கூறுகையில், அந்த இளைஞருக்கு 18 வயது இருக்கும், புகைப்படம் எடுப்பதாக சொல்லி பின்னால் தொடுவது, இடுப்பை கிள்ளுவது என சில்மிஷம் செய்தார். நான் அவரை கீழே தள்ளிவிட்டேன். சுற்றி இருந்தவர்கள் அவருக்கு அடி கொடுத்தனர். அந்த நபர் சிரித்தபடி இருந்தார். அநேகமாக அவர் சைக்கோவாக இருக்கலாம். இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, இனி என் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.